இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, March 05, 2014

அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அரசாணை மூலம் தமிழக அரசு உறுத

   தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் பி.சிவசங்கரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:– அரசு துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், பல்கலைக்கழகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும், 3 மாதங்களுக்குள் காலிப்பணியிடங்களைக் கண்டறிந்து, அதில் அந்த சதவீதத்தின்படி அவர்களுக்கு பணிநியமனம் வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகள் உத்தரவிட்டுள்ளன. அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், வேலைவாய்ப்பு அலுவலகம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றிடம் இருந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களின் எண்ணிக்கை பெறப்பட்டன.

அதன்படி அவர்களுக்கான ஆயிரத்து 928 பணியிடங்கள் மற்றும் பின்னடைவுப் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் சிறப்பு போட்டித்தேர்வு மூலம் மாற்றுத்திறனாளிகள் நிரப்பப்படுவார்கள். அரசுக்கான அனைத்து பணியிடங்களிலும் இனி 3 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும். உயர்கல்வி துறையில் கண்டறியப்பட்டுள்ள 91 பின்னடைவு பணியிடங்களை அந்தந்த பல்கலைக்கழகங்கள் நிரப்ப வேண்டும். சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையில் உள்ள 259 பின்னடைவு பணியிடங்களை (அங்கன்வாடிகளில்) நிரப்ப, மாவட்ட கலெக்டர்கள் விளம்பரம் செய்வதற்கு அரசாணை பிறப்பிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment