பிளஸ் 2 பொதுத்தேர்வு கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பயோ-கெமிஸ்ட்ரி தேர்வுகளுடன் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) நிறைவடைகிறது. தமிழகம் முழுவதும் 66 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 21 முதல் நடைபெற்று வருகின்றன. சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு மார்ச் 3-ஆம் தேதி தொடங்கியது. மாநிலம் முழுவதும் 2,242 மையங்களில் பள்ளிகளின் மூலமாக 8.26 லட்சம் பேரும், தனித்தேர்வர்களாக 53 ஆயிரம் பேரும் தேர்வை எழுதி வருகின்றனர்.
விடைத்தாள் பக்கங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் காப்பியடித்த மாணவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்து விட்டது. அதேபோல், தேர்வு முடிந்த பிறகு பிரத்யேகமாக அமர்த்தப்பட்ட வாகனங்களில் விடைத்தாள்கள் எடுத்துச் செல்லப்பட்டன. விடைத்தாள்கள் தொலைதல் போன்ற எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இதுவரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள், கூடுதல் பக்கங்கள், டம்மி எண்ணுக்குப் பதிலாக ரகசிய பார்கோடு எண் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் இந்தத் தேர்வில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டன.
No comments:
Post a Comment