தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 570 கல்லூரிகள் உள்ளன. இதில் 2 லட்சம் பி.இ., பி.டெக் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. பிளஸ்–2 தேர்வு 25–ந் தேதியுடன் முடிகிறது. முக்கிய பாடப்பிரிவிற்கான தேர்வுகள் நேற்றுஉடன் நிறைவு பெற்றன. பிளஸ்–2 தேர்வு அடுத்த வாரம் முடிவடையும் நிலையில் பெற்றோர்கள் எண்ணம் உயர்கல்வியில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதாகும். பெரும்பாலும் பொறியியல் படிப்பை அதிக பெற்றோர்கள், மாணவர்கள் தேர்வு செய்கிறார்கள்.
என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பம் எப்போது வினியோகம் செய்யப்படும் என்று மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு தேவையான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது. இது குறித்து தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைப் பிரிவு செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:–
என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த வருடம் 2.3 லட்சம் விற்பனை ஆனது. இந்த ஆண்டு 2.5 லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சிட முடிவு செய்யப்பட்டது. தேவைப்பட்டால் கூடுதலாகவும் அச்சடிக்கப்படும். விண்ணப்ப படிவங்கள் மே மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படும் கலந்தாய்வு ஜூன் 3–வது வாரம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம். வழக்கம் போல் கலந்தாய்வு சென்னையில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment