தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 26–ந் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வு எழுத தட்கல் முறையில் விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.tndge.in என்ற இணையதளத்தில் SSLC EXAM MARCH 2014 PRIVATE CANDIDATE / TATKAL HALL TICKET PRINT OUT என கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண் (அப்ளிகேசன் நம்பர்) மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் ஹால்டிக்கெட் திரையில் தோன்றும், அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அறிவியல் பாட செய்முறை தேர்வு இன்று முதல் 22–ந் தேதி வரை சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. ‘‘சிறப்பு அனுமதி திட்டத்தில்’’ (தட்கல்) விண்ணப்பித்துள்ள தனி தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டு மற்றும் அறிவியல் செய்முறை பதிவேடு (ரெக்கார்டு நோட்டு) ஆகியவற்றுடன் தாங்கள் ஏற்கனவே அறிவியல் செய்முறை பயிற்சி பெற்ற பள்ளியிலேயே செய்முறை தேர்வுக்கு கலந்து கொள்ளுதல் வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் மற்றும் செய்முறை தேர்வு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment