""உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, அடுத்த மாதம், 23ல் இருந்து, ஜூன், 1 வரை, கோடை விடுமுறை. ஜூன், 2ம் தேதி, மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது: உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, அடுத்த மாதம், 16 வரை பொதுத் தேர்வுகள் நடக்கின்றன. அதன் பின், நான்கு நாள் விடுமுறைக்கு பின், பள்ளிகள் இயங்கும். பின், 23ல் இருந்து, ஜூன், 1 வரை, கோடை விடுமுறை. ஜூன், 1ல், பள்ளி திறப்பு நாள் என்றாலும், அன்று, ஞாயிற்றுக்கிழமையாக உள்ளது.
எனவே, ஜூன், 2ல், அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும். பிளஸ் 1 வகுப்பு மட்டும், ஜூன், 16ம் தேதி திறக்கப்படும். இவ்வாறு, ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளை பொறுத்தவரை, ஏப்ரல், 30 வரை, பள்ளி வேலை நாட்களாகும். எனவே, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே, 1 முதல், ஜூ ன், 1 வரை விடுமுறை. இதற்கிடையே, அடுத்த மாதம், 24ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தல் காரணமாக, ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளுக்கு, ஏப்ரல், 23, 24, 25 ஆகிய, மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக, தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment