மாதம்தோறும் உயர்த்தப்படும் டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்வில் நிர்ணயித்த அளவைவிட மேலும் அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பெட்ரோலியப் பொருட்களை மானிய விலையில் விற்பனை செய்வதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டு தோறும் 90 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த இழப்பை ஈடுகட்ட பெட்ரோல் விலையை சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.
இதேபோல் டீசல் விலையை மாதந்தோறும் 50 பைசா உயர்த்திக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தநிலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த மே மாதம் முதல் கடும் சரிவை சந்தித்தது. இதனால் கச்சா எண்ணெய்யை கூடுதல் விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரு லிட்டர் டீசலுக்கு 11 ரூபாய் வரையும், சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு 555 ரூபாயும் இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன.
இதையடுத்து மாதந்தோறும் 50 பைசா உயர்த்தப்பட்டு வரும் டீசல் விலையை ஒரு ரூபாயாக உயர்த்தவும், இதேபோல் சமையல் கேஸ் விலையை 5 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்தவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன
No comments:
Post a Comment