மாநில அளவில், பொதுத் தேர்வாக, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, டிசம்பர், 10ம் தேதியில் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வு, டிசம்பர், 12ம் தேதியில் இருந்தும் துவங்குகின்றன. மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வை போலவே, இந்த தேர்வுகளும் நடக்கும். காலை, 10:00 மணி முதல், 10:10 வரையான 10 நிமிடம், கேள்வித்தாளை படித்துப் பார்க்க வழங்கப்படும்.
அடுத்த, 5 நிமிடம், விடைத்தாளில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்ய வழங்கப்படும். விடை எழுதுவதற்கான நேரம், 10:15ல் துவங்கும். இந்த 15 நிமிடங்கள், இரு தேர்வுகளுக்கும் பொருந்தும். எனினும், பிளஸ் 2 தேர்வு, மூன்று மணி நேரம் என்பதால், 10:15க்கு துவங்கி, 1:15க்கு முடிவடையும். 10ம் வகுப்பு தேர்வு, 10:15க்கு துவங்கி, 12:45க்கு முடியும். 10ம் வகுப்பு தேர்வை, 11 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேரும் எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment