வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ள தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்க ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ்.மேகநாதன் தலைமையில் சனிக்கிழமையன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது.
கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் எம்.பிரபு, பொருளாளர் வி.சோலை, இணைச் செயலாளர் கே.முத்துக்குமார், துணைத் தலைவர் டி.கலைச்செல்வன் ஆகியோர் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியா சங்க மாவட்டத் தலைவர் கி.ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் 15 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணியமத்தப்பட்ட தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 2012-13 ஆண்டில் மறுநிர்ணயம் செய்யப்பட்ட ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
விருப்ப அடிப்படையிலான பணியிட மாறுதல்களை வழங்க வேண்டும். விழாக்கால முன்பணமும், போனசும் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 5.12.2013 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொருந்திரள் முறையீடு போராட்டம் நடத்துவது. அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக 4.12.2013 அன்று மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திலும், 28.12.2013 அன்று திண்டுக்கல்லில் நடைபெறும் சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பூதிய ஒழிப்பு மாநாட்டிலும் திரளான ஊழியர்களைப் பங்கேற்கச் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment