ஆசிரியர் தகுதி தேர்வு என, அழைக்கப்படும் "டி.இ.டி.,' தேர்வில், தேர்ச்சி பெற்ற, 2,448 பேரின், "ரேங்க்' பட்டியல், புதிய விதிமுறைகளின்படி, மாற்றி அமைக்கப்படுகிறது.
ஏற்கனவே நடந்த, டி.இ.டி., தேர்வில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். "இவர்களது பணி நியமனம், பணி நியமனத்திற்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்' என, சென்னை ஐகோர்ட் தெரிவித்தது.அதன்படி, புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி, தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, புதிய, ரேங்க் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதனால், தேர்வு பெற்றவரின், ரேங்க் இடம் மாறலாம்; ஆனால், வேறு எந்த பாதிப்பும் ஏற்படாது என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.புதிய தேர்வுப் பட்டியல், ஓரிரு நாளில் வெளியிடப்படும்.புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும், இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மட்டும், சுப்ரீம் கோர்ட்டில் இறுதி தீர்ப்பு வரும் வரை, மாநில பதிவுமூப்பு அடிப்படையிலேயே (டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்) நடக்கும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment