ப்ளஸ் 2 தனித்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி, நாமக்கல்லில் துவங்கியது. அக்டோபர் மாதம், ப்ளஸ் 2 தனித்தேர்வு எழுதிய மாணவ, மாணவியரின் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாத்தில், நேற்று துவங்கியது.
அக்டோபர், 30ம் தேதி வரை நடக்கும் இப்பணியில், முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், 212 ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளனர். 29ம் தேதி, 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று, விடைத்தாள் மதீப்பீடு பணியை மேற்கொள்கின்றனர். இப்பணிகளை, நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குமார் ஆய்வு செய்தார். அப்போது, "விடைத்தாள்களுக்கு சரியான மதிப்பீடு வழங்க வேண்டும் என்றும், தவறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என, அறிவுறுத்தினார்.தனித்தேர்வர்களின் விடைத்தாள் மதிப்பீடு பணி நடப்பதால், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment