வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் இன்றுடன் முடிகிறது.அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடக்கிறது.
இந்த வரைவு பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய அக்டோபர் 7, 14, 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சிறப்பு முகாம் இன்றுடன் முடிகிறது.சிறப்பு முகாம் முடிந்தாலும் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தலுக்கான படிவங்களை பூர்த்தி செய்து தகுந்த ஆவணத்துடன் அந்தந்த மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாக்குசாவடி மையங்களில் வரும் 31ம் தேதி வரை வழங்கலாம்.
அதன்பின், வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று விசாரணை நடத்துவார்கள். பின்னர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும். ஜனவரி 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். புதிதாக விண்ணப்பித்தோருக்கு வாக்காளர் அடையாள அட்டை வாக்காளர் தினமான ஜனவரி 25ம் தேதி வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment