தமிழகம் முழுவதும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடத்தை அனைவருக்கும் கல்வித் திட்டம்(எஸ்.எஸ்.ஏ.) மூலம் தாற்காலிகமாக நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆங்கிலம், கணக்கு பாடத்துக்கு ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் செய்வதறியாது உள்ளனர். இந்த ஆண்டு ஆசிரியர்கள் இல்லாமல் காலாண்டுத் தேர்வை மாணவர்கள் சந்தித்தனர். காலாண்டுத் தேர்வு முடிந்து அரையாண்டுத் தேர்வுக்கான வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கி உள்ளன.இதற்கிடையில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தை தாற்காலிகமாக நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதாவது ஆங்கிலம் மற்றும் கணக்குப் பாடத்தில் முதுநிலை படித்து அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்களைக் கொண்டு வாரத்தில் 2 நாள் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ÷மாணவர்களுக்குப் பாடங்களை எப்படி நடத்துவது என்று ஆசிரியர்களுக்கு பாடம் நடத்துவதே வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களின் பணியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment