இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, February 14, 2018

சிறப்பு ஆசிரியர் காலி பணியிடம் பட்டியல் அனுப்ப அரசு உத்தரவு


காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் குறித்த விபரங்களை, வரும், 16ம் தேதிக்குள் அனுப்பி வைக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் பொதுத்தேர்வும், அதை தொடர்ந்து, பிற வகுப்புகளுக்கான தேர்வுகளும் நடைபெறவுள்ளது.

வரும், 2018 - 19ம் கல்வியாண்டுக்கு நான்கு மாதங்களே உள்ளதால், கல்வித் துறை அதற்கேற்ப தயாராகி வருகிறது. தமிழ்நாடு பள்ளி கல்வி இணை இயக் குனர் (பணியாளர் தொகுதி) அலுவலகம், முன்னேற் பாடுகளை துவக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மே, 31 ம் தேதி ஓய்வு பெற உள்ள உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் குறித்த விபரங்களை சேகரிக்க, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பட்டி யல் தயாரிப்பது குறித்து, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில், (2016 மற்றும் 2017) ஆண்டுகளில் ஓய்வு பெற்றோர்; நடப்பு ஆண்டு ஓய்வு பெறுவோர், அதனால் பள்ளியில் ஏற்படும் காலி பணியிடம் குறித்த விபரங்களை, தனித்தனியே சேக ரித்து வருகின்றனர். இவ்விபரம், மாவட்ட அளவில் இருந்து, வரும், 16ம் தேதிக்குள் கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், விரைவில் அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில், பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கியுள் ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment