தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 318 அரசுப் பள்ளிகளுக்கு இலவச இணைய வசதி வழங்கப்படவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது பள்ளிக் கல்வித்துறை, ஏசிடி ("அட்ரியா கன்வெர்ஜன்ஸ்') தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய இரு தரப்பினரும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 252 அரசுப் பள்ளிகள், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 66 பள்ளிகள் என மொத்தம் 318 பள்ளிகளில் 100 எம்பிபிஎஸ் திறன் கொண்ட இலவச இணைய வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. மாதந்தோறும் 300 ஜிபி அளவு கொண்ட இணையவசதி வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ், இயக்குநர் ரெ.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment