திருப்பூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வரும் 18ம் தேதி முதல் திருப்புதல் தேர்வு துவங்குகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பாடத்திட்டங்கள் அனைத்தும் நிறைவு பெற்று, தற்போது பள்ளிகளில் அலகுத்தேர்வுகள் நடக்கிறது.மாணவர்களை முழுமையாக பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த, பொதுத்தேர்வுக்கு முன்பு, திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது.
திருப்புதல் தேர்வுகள், பொதுத்தேர்வின் மாதிரி வடிவில் நடத்தப்படும். இதில், கேட்கப்படும் பெரும்பான்மையான வினாக்கள், பொதுத்தேர்வுகளிலும் கேட்கப்படுவதுண்டு. நடப்பு கல்வியாண்டுக்கான திருப்புதல் தேர்வுகள், திருப்பூர் மாவட்டத்தில், ஜன., 18ம் தேதி முதல் துவங்குகிறது. மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
முதல் திருப்புதல் தேர்வு, ஜன., 18ம் தேதி துவங்கி, 31ம்தேதி வரை நடக்கிறது. தேர்வுகள், காலை, 10:00 மணிக்கு துவங்கி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, 12:30 மணியுடனும், பிளஸ் 2 வகுப்புக்கு 1:00 மணி வரையும் நடக்கிறது. பொதுத்தேர்வு வடிவில் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
No comments:
Post a Comment