இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, January 14, 2018

ஏறுதழுவுதல்

ஏறுதழுவுதல்
-மணிகண்டபிரபு

தமிழகம் முழுவதும் இன்று பரவலாக பேசப்படுவதில் ஒன்று ஜல்லிக்கட்டு.அனைவரின் கவனமும் ஜல்லிக்கட்டு எனும் ஏறுதழுவலை எதிர்நோக்கியே.எல்லாம் தெளிவாக இருக்கிறது என்ற நிலையே தெளிவின்மையின் துவக்கம்.இளைஞர்கள் முதல் இணையம் வரை வைரலாக உள்ளது.

#தமிழகத்தில் ஜல்லிக்கட்டின் பாரம்பரியம்

தமிழரின் பாரம்பரிய விளையாட்டான 'ஏறுதழுவுதல்' விளையாட்டின் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகம் முழுவதும் தைமாதம் நடைபெறுகிறது.அக்காலத்தில் சொரிக்காம்பட்டி எனும் அழகத்தேவனுக்கும்,முக்கம்பட்டி எனும் ஊரில் செல்லச்சாமி என்ற மாடுபிடி வீரனுக்கும் நடுகல் எடுத்து வழிபட்டு வருவதிலிருந்து புரிந்து கொள்ளலாம் தமிழர்களின் ஜல்லிக்கட்டின் ஈடுபாடு.

இது தமிழர்களின் கலாச்சார அக்கறையும் பண்பாட்டு நம்பிக்கையும் ஆகும்.இறைச்சிக்கு என வெட்டும்போதும்,அடிமாடாய் ஏற்றுமதி செய்யும்போதும் அமைதியாய் இருந்தவர்கள் தடை போடும் அளவு துன்புறுத்தவில்லை என தெரிந்தும் தடை இருப்பது வேதனை.

காளை வளர்ப்பு பயிற்சி

புகழுக்காகவும் பெருமைக்காகவும் வளர்க்கப்படும் காளைகளே ஜல்லிக்கட்டில் பயன்படுத்தப்படுகின்றன.வீட்டில் வளரும் கன்றுகளை தேர்ந்தெடுக்காமல் காட்டில் கூட்டம் கூட்டமாக மேய்ந்து வளரும் வரும் கிடைமாட்டுக் கன்றுகளிலிருந்து தேர்ந்தெடுக்கின்றனர்.கன்றுகளுக்கு இயல்பாக சுழி இருப்பதைவிட உடலின் வேறு சில பகுதியில் சுழி இருந்தால் பெரும்பாலானோர் வளர்ப்பதில்லை.இயற்கையாக காளைகளுக்கு நெற்றியில்,முதுகில்,கொண்டையில் என மூன்று சுழிகள் இருக்கும்.சில காளைகளுக்கு அஞ்சு சுழி இருக்கும்."அஞ்சு சுழி மாடு கெஞ்சினாலும் கிடைக்காது" என்பார்கள் நாட்டுப்புறத்தில்.கன்றினை ஒருவரின் பராமரிப்பில் வளர்வதால் மற்றவரை கண்டால் குத்தும் இயல்புடன் வளர்கிறது.

கன்றுக்கு அளவான தவிடு,புண்ணாக்கு,நீச்சல்பயிற்சி போன்றவை வயிறு பருக்காமல் இருக்க வழிவகுக்கிறது.வயிறு பருத்திருந்தால் வேகமாய் ஓடமுடியாது.விரைவில் சோர்ந்துவிடுவதை தவிர்க்க இப்பயிற்சி.
காளையின் பற்கள் நான்கு ஆண்டிற்குள் எட்டுப்பற்களும் விழுந்து முளைத்துவிட்டால் காளை பருவத்தை அடைந்துவிட்டதாய் அர்த்தம்.இதன் பின்னர் ஐந்து ஆண்டுகள் சிறப்பாய் விளையாடும்.

காளையின் தலை,காதுகள் சிறியதாய் இருக்க வேண்டும்.கண்கள் பெரிதாய் இருக்க வேண்டும்.,பூ விழுந்திருக்க கூடாது.தொங்குதசை சிறியதாக இருக்கணும்.பருத்த திமில் இருந்தால் திமில் சாய்ந்து கொண்டே இருக்கும்,எளிதில் பிடித்து அடக்கிவிடுவான் என்பதால் பருத்த திமில் காளைகளை பெரும்பாலும் தேர்ந்தெடுப்பதில்லை.

#பயிற்சிகள்

மாடுபிடி வீரர் மாடு பிடிக்க கடும் பயிற்சி மேற்கொள்கிறார்.மது அருந்தாமை,தீவிர உடற்பயிற்சி செய்கிறார்.

பரந்த வெளியில் காளையின் கழுத்தில் மணல் சாக்கு கட்டி,சுற்றி இளைஞர்கள் சிறுவர்கள் சுற்றி நின்று கூச்சலிடுவர்.இதனை பாய்ச்சல் காட்டுதல் என்பர்.வளர்த்தவரை தவிர மற்றவரை குத்த நினைக்கும்.மணல் மூட்டையின் பாரம் தாங்காமல் நிற்கும்.தன்னையும் பராமரித்தும் மற்றவர்களை குத்தவும் பயிற்சி அளிப்பார்கள்.

இதேபோல் மரத்தில் பொம்மை குத்த பயிற்சி அளிக்கப்படும்.எதிரே இருக்கும் பொம்மையை குத்த முயலும்போது மரக்கிளையில் அமர்ந்திருப்பவர் பொம்மையை அங்கும் இங்கும் அசைத்து காளையின் கவனத்தை நிலைநிறுத்துகிறார்.

எலுமிச்சம்பழத்தை பரந்தவெளியில் உருட்டிவிடுவர், காளை அதனை குறிவைத்து குத்தும்.இதன்மூலம் மாடுபிடி வீரர் தரையில் படுத்திருந்தாலும் குத்தி காயப்படுத்தும்

#ஜல்லிக்கட்டு விளையாட்டின் விதிமுறை

மாடுகளின் இரத்தம் சிந்த அனுமதிப்பதில்லை.மனிதன் இரத்தம் சிந்தியாவது காளையை தழுவுகிறான்.
மாடு நுரை தள்ளிவிட்டால் உடனே நிறுத்தும்படி அறிவிக்கப்படும்.

வாடியிலிருந்து வெளியேறும் காளை ஓடக்கூடியதாக இருந்தால் மாடுபிடிவீரன் 30அடி தூரத்திற்கு திமிலை அணைத்தவாறு செல்லனும்

காளை நின்றுவிளையாடும் குணமாய் இருந்தால் வீரன் தழுவி மூன்று தாவிற்கு கீழே விழாமல் இருக்கணும்.ஜல்லிக்கட்டு வேறு மஞ்சுவிரட்டு வேறு.வாடியிலிருந்து ஒருகாளை அனுமதித்த பின்னர் அடுத்தகாளை அனுமதிக்கப்படும்.ஆனால் மஞ்சுவிரட்டுக்காக கொண்டுவரப்பட்ட காளைகள் அனைத்தும் மஞ்சு விரட்டுக்கு முன்னரே அடைத்துவிட வேண்டும்.பின்னர் விழாக்குழுவினர் திறந்து விட்டவுடன் 50அடி தூரம் கடந்தபின் பலர் கூடி அடக்கி கழுத்தில் கட்டியிருக்கும் பொருட்களை எடுத்துக் கொள்வதே மஞ்சுவிரட்டு.
எருதுவின் கழுத்தில் வடத்தை கட்டி வட்டப்பாதையில் சுற்றவிட்டு பிடிப்பது எருதுகட்டு எனப்படுகிறது.

ஜல்லிக்கட்டில் பிடிபட்ட காளைகள் உழவுத்தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது.இதனை வாடிவாசல் நாவல் கூறுகிறது.

பிடிபாடாத காளையினை வழிபடும் வழக்கமும் உள்ளது.தொழுவத்தில் மஞ்சள் பத்திட்டு சிறப்பான உணவு வழங்கப்படுகிறது.
இத்தகைய மாட்டின் உரிமையாளரை ஊர்ப்பெரியவர்கள் நேரில் பார்த்து வெத்தலை பாக்கு வைத்து ஜல்லிக்கட்டுக்கு அழைக்கும் வழக்கமும் உண்டு.

மாட்டை அணைத்து வெற்றி கண்ட வீரனை ஊரே பெருமையுடன் பார்க்கிறது.பிடிபடாத காளை இருக்கும் வீட்டினை மதிப்புடனும் தன்மானத்தின் உச்சமாய் பார்க்கப்படுகிறது.

#தடை:
இத்தகைய பாரம்பறிய விளையாட்டை  தடை செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாட்டினங்களை அழிவிலிருந்து காக்கப்பட வேண்டும்.நாட்டு மாடுகள் 137 லிருந்து 36 ஆக குறைந்துள்ளது.
தமிழக மாடுகளில் காங்கேயம் காளை,புளிய குளம் போன்ற மாட்டினங்களை மேம்பட்ட பெருக்கம் செய்ய ஜல்லிக்கட்டு அடித்தளமாகிறது.

இரண்டு பவுனோ,உருமத்துணியோ காளையை அடக்க உந்துதல் இல்லை, அது மக்களின் மதிப்பை பெறும் வாழ்வு என்று சி.சு செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலில் வரும்.
அத்தகைய மக்களின் மாண்பு இன்று கேள்விக்குறியாகி உள்ளது.

தொ.பரமசிவம் அவர்கள் கூறும்போது

மாடு அடக்குதல் அல்ல அணைத்தல். it is not a wild animal, its pet animal.
மாடு என்பது காட்டிலே பிறந்து வாழ்வது அல்ல.மனிதனுடனே வாழ்ந்து மனிதனுடனே மடிகிறது.மேலும் காயம்படாத விளையாட்டுகள் ஏதும் இருக்கா? என்றார்.

இதில் காணப்படும் பிரச்சனைகளையும்,
சீர்திருத்தங்களையும் செய்து தடை நீக்கம் செய்ய வேண்டும்

#ஜல்லிக்கட்டு சார்ந்த நம்பிக்கைகள்

நம்பிக்கைகள் அனைத்தும் முன்னோர்களால் உருவாக்கப்படவை.அவை காலங்காலமாக ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு பரவியுள்ளன.உண்மையை விரும்பி ஏற்றுக்கொள்ளுதலே நம்பிக்கை எனப்படுகிறது.இந்நம்பிக்கைகளே மக்களின் பழக்கமாய் மாறியுள்ளன.

ஐக்கிய நாடுகளின் நிறுவனச் சட்டம் 1948இன்படி கலாச்சாரம் மற்றும் சமூக உரிமையைத் தொடர்ந்து பராமரிப்பதின் அவசியம் கருதியாவது இவ்வீரவிளையாட்டைத் தமிழ் மண்ணில் தொடர வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் தற்போதைய நம்பிக்கையாய் உள்ளது.!"

-ப.மணிகண்டபிரபு

No comments:

Post a Comment