உள்ளாட்சி தேர்தலில், மூன்று வகையான ஓட்டுப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், ஊரக பகுதிகளில் ஓட்டுப் பெட்டிகளும் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் கோத்ரெஜ், டான்சி (நடுத்தரம்), டான்சி (சிறப்பு) ஆகிய, மூன்று வகையான ஓட்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. கொள்ளளவை அறிந்து ஓட்டுச்சாவடிகளுக்கு ஓட்டுப் பெட்டிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோத்ரெஜ் பெட்டி, ஐந்து வேட்பாளர்களுக்கான ஓட்டுச்சீட்டுகள், 500 வரையும்; 6 முதல், 10 வேட்பாளர்களுக்கான ஓட்டுச்சீட்டுகள், 300 வரையும் கொள்ளும். டான்சி (நடுத்தரம்) பெட்டி, ஐந்து வேட்பாளர்களுக்கான ஓட்டுச்சீட்டுகள், 1,200 வரையும்; 6 முதல், 10 வேட்பாளர்களுக்கான ஓட்டுச்சீட்டுகள், 700 வரையும், 11 முதல், 15 வேட்பாளர்களுக்கான ஓட்டுச்சீட்டுகள் 400 வரையும் கொள்ளும்.
டான்சி (சிறப்பு) பெட்டியில், 10 வேட்பாளர்களுக்கான ஓட்டுச்சீட்டுகள், 1,600 வரையும்; 11 முதல், 20 வேட்பாளர்களுக்கான ஓட்டுச்சீட்டுகள், 900 வரையும்; 21 முதல், 25 வேட்பாளர்களுக்கான ஓட்டுச்சீட்டுகள், 650 வரையும் கொள்ளும். மேலும், ஒரே பெட்டிக்குள் மாவட்ட ஊராட்சி வார்டு, ஒன்றிய வார்டு, ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர் என, நான்கு ஓட்டுச்சீட்டுகள் போடப்படும். அதன்படி ஓட்டுப் பெட்டிகளை கணக்கிட வேண்டும் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment