நான்கு கோடி ஊழியர்களின் பிஎஃப் கணக்கை வைத்துள்ள ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி ஆணையம் பிஎஃப் கணக்கின் வட்டி விகிதத்தை 8.6 சதவீதமாக இந்த ஆண்டு குறைக்க நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பெயரில் தொழிலாளர் அமைச்சகத்துடன் இணைந்து முடிவு செய்துள்ளது.
2015-16 நிதி ஆண்டில் 8.8 சதவீதம்
ஊழியர்கள் வைப்பு நிதிக்கான வட்டியாக 8.7 சதவீதத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தாலும் ஓய்வூதியக் குழுவின் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி ஆணையம் 2015-16 ஆண்டு வரையில் 8.8 சதவீதம் அளித்து வருகிறது.
நிதி அமைச்சகம் - தொழிலாளர் அமைச்சகம்
நிதி அமைச்சகம் தொழிலாளர் அமைச்சகத்திற்கு ஊழியர்கள் வைப்பு நிதிக்கான வட்டியைச் சிறு சேமிப்பு திட்டங்கள் போன்று குறைக்குமாறு அழுத்தம் தெரிவித்து வருகிறது. இது குறித்து இரண்டு அமைச்சகங்களுக்கும் இடையில் கருத்தொற்றுமை பெற்று நடப்பு நிதி ஆண்டு முதல் 8.6 சதவீதம் மட்டுமே அளிக்க இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
முடிவு இது வரை எடுக்கவில்லை
மேலும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் நடப்பு ஆண்டிற்கான எந்த முடிவையும் இது வரை எடுக்கவில்லை என்றும், மத்திய அரசின் அறங்காவலர்கள் குழுவே இது பற்றிய இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றும், இது குறித்த வட்டி விகிதம் வருமான திட்ட அடிப்படையில் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
நிதி அமைச்சகத்தின் சம்மதம்
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியை அளிக்க நிதி அமைச்சகத்தின் சம்மதம் கண்டிப்பாகத் தேவை அதேசமயம் மத்திய அரசு அதன் வருமானத்தில் இருந்தது அதிகம் அளிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்கள்
தொழிற்சங்கங்கள் நிதி அமைச்சகம் நிச்சயமாக இதை ஏற்றுக்கொள்ளக் கூடாது, இது ஊழியர்களின் பணம், அவர்கள் பணத்தை முதலீடு செய்து லாபம் அளிக்கக்கூடியது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த நிதி ஆண்டுகளில்
சென்ற நிதி ஆண்டின் போது முதலில் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டியை 8.8 சதவீதமாக மத்திய அரசுக்கு பரிந்துரைத்த போது 8.7 சதவீதத்திற்கே ஒப்புதல் அளித்தது. பின்னர் 8.8 சதவீதம் அளிக்க ஒப்புக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
2013-2014 மற்றும் 2014-2015 நிதி ஆண்டுகளில் 8.75 சதவீதமும், 2012 முதல் 2013 வரையிலான நிதி ஆண்டில் 8.5 சதவீதமும், 2011-2012 நிதி ஆண்டில் 8.25 சதவீதம் வட்டி விகிதமும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment