இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, September 09, 2016

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு: 'மொபைல்' சேவை துவக்கம்


'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு திட்டத்திற்காக, மொபைல், 'ஆப்' சேவையை, உணவுத் துறை அறிமுகம் செய்து உள்ளது. தமிழகத்தில், தற்போது புழக்கத்தில் உள்ள, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி மூலம், மக்களிடம் இருந்து, 'ஆதார்' விபரம் பெறப்பட்டு வருகிறது.

ஒரே நேரத்தில் பலரும், 'ஆதார்' விபரம் வழங்க, ரேஷன் கடைக்கு செல்வதால், கூட்டம் அதிகமாக உள்ளது. மக்கள், தங்கள் இடத்தில் இருந்தே, ஆதார் விபரத்தை வழங்க, மொபைல், 'ஆப்' சேவையை, உணவுத் துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையைப் பெற, மொபைல் போனில், 'டி.என்.இ.பி.டி.எஸ்.,' என்ற மொபைல், 'ஆப்'ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில், ரேஷன் கார்டுதாரர், தன் மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, சமர்ப்பிக்க வேண்டும்.

பின், அவற்றில் கேட்கப்படும் விபரங்களை, 'டைப்' செய்து, 'ஆதார்' அட்டையையும், 'பார் கோடு' வாயிலாக, 'ஸ்கேன்' செய்து சமர்ப்பிக்கலாம். இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை, கோவை போன்ற நகரங்களில், அதிக அளவில், மொபைல் போன் பயன்பாடு உள்ளது. இங்குள்ள பலர், ரேஷன் கடைக்கு செல்வது கிடையாது.

எனவே, அவர்கள், ரேஷன் கடைக்கு சென்று காத்திருக்காமல், எளிய முறையில், ஆதார் விபரங்களை வழங்க, 'மொபைல் ஆப்' சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த சேவையை பயன்படுத்தி பலரும், தங்கள் ஆதார் விபரங்களை, விரைவாக வழங்கினால், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பணி, வேகம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment