தொலைதூர-மலைப் பகுதியில் குடியிருப்புகளில் வாழும் குழந்தைகள் இடர்பாடுகள் ஏதுமில்லாமல் பள்ளிக்குச் செல்வது அவசியமாகும். அவர்களது இடைநிற்றலைத் தவிர்க்க போக்குவரத்து வசதி, வழிக் காவலர் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் நிகழ் கல்வியாண்டிலும் செயல்படுத்தப்படும்.
பள்ளிகளில் இருந்து இடைநின்ற குழந்தைகளும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளும் கல்வி பயில சிறப்புப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, 3 ஆண்டுகளில் 20 ஆயிரம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
நூல்கள் மின்மயம்: தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள சுமார் ஆயிரம் நூல்கள் தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து மின்மயமாக்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
93 பகுதிநேர நூலகங்களானது ஊர்ப்புற நூலகங்களாகத் தரம் உயர்த்தப்படும். இதற்கென நூலகர் பணியிடங்கள் உருவாக்கப்படும். 32 மாவட்டங்களில் உள்ள மைய நூலகங்களில் சூரியஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் அளிக்கப்படும்.
இலவச சிறப்புப் பயிற்சி மையம்:
சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி-பயிற்சி நிறுவனத்தில் ஆங்கில வழியில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு தொடங்கப்படும். இதனால், ஆண்டுதோறும் 50 மாணவர்கள் பயனடைவர்.
பார்வையற்றவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியானது மூன்று மாவட்ட ஆசிரியர் கல்வி-பயிற்சி நிறுவனங்களில் அனைத்து தேர்வர்களுக்கும் அளிக்கப்படும்.
பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு:
அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிகழ் கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பெற அனைத்து அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகளில் போட்டிகள் நடத்தி விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படும்.
3-ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பாடப் புத்தகங்களுடன் இலக்கணப் பயிற்சித் தாள்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
# யோகா என்பது மனம், உடல், ஆன்மாவை ஒருநிலைப்படுத்துவதற்கான பயிற்சியாகும்.
பள்ளி மாணவர்களின் விளையாட்டு செயல்பாடுகளின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாகவும் யோகப் பயிற்சி உள்ளது. எனவே, மதிய உணவு இடைவேளைக்கு முன்னர் இந்தப் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு: பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான கட்டடம், சுத்தமான குடிநீர், தூய்மையான கழிப்பறை, பாதுகாப்பான மின் இணைப்புகள், இருக்கை, போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகள் வகுத்து உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு சுயநிதி-அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகளின் பெற்றோர் உள்ளடக்கிய 5 உறுப்பினர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் வாரம் ஒருமுறை பள்ளி வேலை நாளொன்றில் பள்ளியைப் பார்வையிட்டு அனைத்து வசதிகளும் கிடைக்கிறதா என்பதை ஆய்வு செய்வர்.
அவர்கள் ஆய்வு செய்த விவரங்களைப் பள்ளி பதிவேட்டில் பதிவு செய்வர். குழுவினரால் குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகளை பள்ளி நிர்வாகம் நிறைவு செய்துள்ளதா என்பதை மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர் ஆய்வின்போது உறுதி செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
# தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்ட உயர் கல்வி புத்தகங்கள், டிஜிட்டல் முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.சமநிலை கல்வி
# சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் ஆங்கில வழியில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு அறிமுகம் செய்யப்படும். அடிப்படை கல்வி பெற்றுள்ள நபர்களுக்கு சமநிலைக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, மூன்றாம் வகுப்பு நிலையில் கல்வி கற்பிக்கப்படும். இத்திட்டம் விழுப்புரம், ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்படும்.சிறப்பு பயிற்சி மையம்
போட்டி தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக, 32 மாவட்ட மைய நூலகங்களுக்கும் நடப்பு ஆண்டு முதல் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி பாடப் புத்தகங்கள், இரண்டிரண்டு தொகுப்புகள் வழங்கப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்விற்காக மூன்று மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் அனைத்து தேர்வர்களுக்குமான சிறப்பு பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும். அனைத்து பள்ளிகளிலும் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படும்.
No comments:
Post a Comment