பி.எட் படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டதால் பி.எட் படிக்க விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின்கீழ் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் ஆயிரத்து 777 சீட்கள் உள்ளன. இதில் சேர்வதற்கான விண்ணப்ப விற்பனை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட 13 கல்லூரிகளில் விற்பனை செய்யப்பட்டது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேற்று மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. அச்சிடப்பட்ட 4 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று மாலை 5 மணி வரை 3 ஆயிரத்து 600 பேர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர் சேர்க்கை செயலாளர் அலுவலகத்தில் சமர்பித்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் 7 ஆயிரத்தும் அதிகமான மாணவர்கள் பி.எட் படிக்க விண்ணப்பித்துள்ளனர். பி.எட் படிப்பிற்கான கால அளவை ஒரு ஆண்டில் இருந்து 2 ஆண்டுகளாக மாற்றி தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
பொறியியல் படித்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு 20 சதவீத சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. பி.எட் படிப்பிற்காக கவுன்சலிங் அகஸ்ட் மாத இறுதியில் நடக்கிறது. இதில் பி.எட் சீட் கிடைப்பது உறுதியில்லை என்பதால், இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள், முதுகலை பட்டப்படிப்பில் ஜூன் மாதம் சேர்ந்து விடுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யும் டெட் தேர்வு நடத்தப்படவில்லை. இவை அனைத்தும் பி.எட் விண்ணப்பம் குறைந்ததற்கான காரணமாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment