உள்ளாட்சி தேர்தலுக்கான, ஓட்டுச்சாவடி விபரங்களை வெளியிடவும், வார்டுக்கு, 100 வாக்காளர் பட்டியல் தயார் செய்யவும், மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபரில் உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம், அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
மாவட்ட தேர்தல் அலுவலர்களாக, கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுச்சாவடி விபரங்களை, மாவட்ட தேர்தல் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றிலும், மாவட்ட தேர்தல் அலுவலர் விரும்பும் இடத்திலும், பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். எனவே, வார்டுக்கு, 100 வாக்காளர் பட்டியல், தயார் செய்ய வேண்டும் என்று, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகராட்சி வார்டுகளில், 1,400 வாக்காளர்கள்; பேரூராட்சிகளில், 1,200 வாக்காளர்களுக்கு, ஒரு ஓட்டுச்சாவடி அமைக்கப்படும். அதற்கு மேல் வாக்காளர்கள் இருந்தால், இரண்டு ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும்.
No comments:
Post a Comment