பி.எட்., படிப்புக்கான கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பிலுள்ள, ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இந்த ஆண்டு, 3,736 பேர் பி.எட்., படிக்க விண்ணப்பித்துள்ளனர். சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்தும் இந்த கவுன்சிலிங், இன்று காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது. மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டில், மாணவர் சேர்க்கை நடக்கிறது.நாளை, தமிழ் மற்றும் ஆங்கிலம்; நாளை மறுநாள், வரலாறு பாடம் மற்றும் பி.இ., - பி.டெக்., முடித்தவர்களுக்கான, 20 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் நடக்கிறது;
25ம் தேதி அரசு விடுமுறை. பின், 26ம் தேதி தாவரவியல் மற்றும் விலங்கியல்; 27ல், இயற்பியல், மனை அறிவியல், பொருளியல், வணிகவியல்; 28ல் வேதியியல், புவியியல், கணினி அறிவியல்; 30ல் கணித பாடங்களுக்கு கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது
No comments:
Post a Comment