பொதுவாக, யாருக்காவது பணம் அனுப்ப வேண்டியதிருந்தால் நெட்பேங்கிங் மூலமாக அனுப்பலாம். வங்கி கிளைக்கு நேரில் சென்று செல்லானை நிரப்பியும் அனுப்பலாம். ஆனால் தற்போது பணம் அனுப்புவது இன்னும் சிம்பிள். பணம் அனுப்ப வேண்டியவரின் அக்கவுன்ட் நம்பர் தெரிந்தால் மட்டும் போதும். உங்கள் கையில் உள்ள ஸ்மார்ட் போனில் பணம் அனுப்ப வேண்டியவரின் வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்து அவரின் கணக்கிலேயே பணத்தை சேர்த்து விடலாம். இப்படி ஒரு சுலபமான வசதியை வங்கிகளின் வாடிக்கையாளர்களின் பணப்பரிமாற்றத்திற்காக அறிமுகப்படுத்தியுள்ளது ‘’நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா’’ (என்.பி.சி.ஐ) நிறுவனம். ’’யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இண்டர்பேஸ்’’ யூ.பி.ஐ என்ற மொபைல் ஆப்-ஐ கடந்த ஏப்ரல் மாதம் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் திருப்தி அடைந்த ரிசர்வ் வங்கி, பொதுமக்களுக்கு இவ்வசதியை வழங்க ஐ.டி.பி.ஐ வங்கி, மகிளா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆந்திரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட 21 வங்கிகள் மூலம் இந்த ஆப்ஸை வழங்க பரிந்துரைத்துள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் தற்போது அந்தந்த வங்கிகளுக்கான, இந்த யூ.பி.ஐ ஆப்ஸை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்து அதில் பணம் செலுத்த வேண்டியவரின் வங்கிக் கணக்கு எண்ணை பதிவு செய்தால் போதும். உங்கள் வங்கி கணக்கில் இருந்து அவரது வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றிவிடலாம். நெட்பேங்கிக் முறையில் நிப்ட் போன்ற வகையில் காத்திருக்கும் நிலை, இதில் இல்லை. நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ, அந்த வங்கிக்கான ஆப்ஸை மட்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
அந்தக் கணக்கில் இருந்து பணத்தை இன்னொரு வங்கி கணக்கிற்கு எளிதாக மாற்றிவிடலாம். நிப்ட் முறையில் பணம் செலுத்த வங்கி கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி எண் ஆகியவை தெரிந்திக்க வேண்டும். ஆனால், யூ.பி.எஸ் ஆப் மூலம் பணம் செலுத்த ஐ.எப்.எஸ்.சி எண் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த அப்ளிகேசனை டவுன்லோடு செய்தாலே போதும், எந்த வங்கி கணக்கிற்கும் பணம் அனுப்பலாம். இதன் மூலம் எந்த பொருளையும் ஆன்லைனில் வாங்கலாம். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள், இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்து கொள்ள முடியும். பெயர் அல்லது மொபைல் எண் கொண்டதாக முகவரியை பதிவு செய்ய வேண்டும். பல வங்கிகளில் இருந்து பணம் அனுப்புவதும், பெறுவதுமாக இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட முகவரியை தரலாம். பணத்தை அனுப்பும் போது பணம் பெறுபவரின் முகவரி, தொகையை தந்ததும், மொபைலுக்கு ’பின்’ நம்பர் வந்தால் பணம் அனுப்பப்பட்டு விட்டதாக அர்த்தம். மொபைல், இண்டர்நெட், ஏ.டி.எம் போல இந்த ஆப் மூலம் 24 மணி நேரமும் பணம் செலுத்தவும் பெறவும் முடியும்.
இதில் இன்னும் SBI மற்றும் Bank of baroda இணையவில்லை. ஆனால் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பானது மட்டுமல்ல, ரூபாய் நோட்டுகளின் பணப்பரிமாற்றம் குறைவதால் கள்ள நோட்டு புழக்கமும் குறைய வாய்ப்புள்ளது. இதில் ஒரு லட்சம் வரையில் பணம் அனுப்பலாம். பணப்பரிவர்த்தனையில் இந்த Unified Payment Interface மிகச்சிறந்த முயற்சியாக கருதப்படுகிறது.
-இ.கார்த்திகேயன்.
No comments:
Post a Comment