தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணியை (நேஷனல் எலக்டர் ரோல் பியூரிபிகேஷன்) ஜூன் 11ல் துவங்க வேண்டும்' என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் அது மீண்டும் செம்மைப்படுத்தப்பட்டு, செப்டம்பர் முதல் வாரத்தில் மீண்டும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். கடந்த மே 16ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இதற்காக அதற்கு முன்பு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. செம்மைப்படுத்தும் பணி தற்போது இறுதி வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளை ஜூன் 11ல் துவங்க வேண்டும். இதை வாக்காளர் பதிவு அலுவலர்களாக(எலக்ட்ரோல் ரிட்டர்னிங் ஆபீஸர்)உள்ள ஆர்.டி.ஓ.க்கள் ஆய்வு செய்து அந்த அறிக்கையை, மாவட்ட கலெக்டர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பின் செம்மைப்படுத்தும் பணிகள் துவங்கும்.
இறுதிபட்டியல்: பின், செப்டம்பர் இறுதியில் இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலில் பேரில் வெளியிடப்படும். இதற்கான உயரதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. இதில் கலெக்டர் ஹரிஹரன், நேர்முக உதவியாளர் அருண்சத்யா, தேர்தல் தாசில்தார் சுரேஷ்கண்ணன் பங்கேற்றனர். கலெக்டர் கூறியதாவது: தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களை பதிவு செய்து கொள்ளலாம், என்றார்.
No comments:
Post a Comment