'அரசு பஸ்களில், அரை கட்டண டிக்கெட் எடுக்க விரும்புவோர், பயணத்தின் போது, குழந்தைகளின் வயது சான்று எடுத்துச் செல்வது அவசியம்' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு பஸ்களில், 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, பயணக் கட்டணம் கிடையாது; 3 முதல், 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு, அரை கட்டணம் வசூலிக்கப்படும்.
ஆனால், ஒவ்வொரு முறையும், அரசு பஸ்சில் குழந்தைகளுடன் பயணிப்போர், அரை டிக்கெட் கேட்பதும், 'முழு கட்டண டிக்கெட் வாங்க வேண்டும்' என்று நடத்துனர் கூறுவதும் வழக்கமாக உள்ளது. குழந்தைகளின் வயதில், நடத்துனருக்கு சந்தேகம் ஏற்படும் போது, உயரத்தை கணக்கிடுவர். இதற்கு பஸ்சில் வசதி உள்ளது. அப்போது, 130 செ.மீ.,க்கு மேல் உயரம் இருப்பின், முழு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. பல நேரங்களில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் உயரமாக இருப்பதால், முழு கட்டணம் செலுத்த நேரிடுகிறது.
இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அரை டிக்கெட் எடுப்பவருக்கான வயது சான்றை, பயணத்தின் போது எடுத்துச் சென்றால், எந்த சிக்கலும் வராது. ஆகையால், இனி அரை டிக்கெட் எடுக்க வேண்டிய பெற்றோர், தவறாமல், குழந்தை யின் வயது சான்று எடுத்துச் செல்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment