பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் செய்முறை வகுப்பிற்கு இன்று முதல் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத்தேர்வுகள் இயக்கக நெல்லை மண்டல துணை இயக்குனர் மகத்தாப்பானு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
2016 - 17ம் கல்வியாண்டில் மார்ச் 2017ல் நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித்தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்), ஏற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும் மற்றும் புதிய பாடத்திட்டத்தில் அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு இந்நாள் வரை பெயர் பதிவு செய்யாத தனித்தேர்வர்களும் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அனைத்து தனித்தேர்வர்களும் இன்று (8ம் தேதி) முதல் 30.6.2016க்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மாவட்ட கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு சென்று செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்பில் 80 சதவீத வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 2016-17ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு செய்முறைத் தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விவரம் அறிந்து செய்முறை தேர்வை தவறாமல் எழுத வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் 8.6.2016 முதல் 30.6.2016 வரை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து இரண்டு நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் 30.6.2016க்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment