இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, June 02, 2016

மாணவர் பஸ் பாஸ் பட்டியல் வரும் 10க்குள் வழங்க உத்தரவு


எத்தனை மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்ற விவரத்தை, ஜூன் 10க்குள், போக்குவரத்துத்துறைக்கு அனுப்ப, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஒன்று முதல், 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அரசு போக்குவரத்து கழகம் இலவச பஸ் பாஸ் வழங்குகிறது.

நடப்பு கல்வியாண்டு துவங்கிய பின்பும், இதற்கான பணி வேகமெடுக்கவில்லை. அதனால், பஸ் போக்குவரத்து செலவுக்கு, பெற்றோர் பணம் கொடுத்து அனுப்புகின்றனர். விரைவில் பஸ் பாஸ் வழங்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு எத்தனை மாணவர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது? இந்தாண்டு மாணவர் சேர்க்கை எவ்வளவு உயர்ந்துள்ளது என்ற விவரங்களை சேகரித்து அனுப்ப, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: புதிய மாணவர் சேர்க்கையால், ஒன்று, ஆறு மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் எண்ணிக்கை மட்டுமே மாற வாய்ப்புள்ளது. இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு; ஏழு முதல் பத்தாம் வகுப்பு; பிளஸ் 2 ஆகிய வகுப்பு பட்டியலில் மாற்றம் இல்லாததால், பழைய பட்டியலில் சில மாற்றங் கள் மட்டும் செய்தால் போதும். மாணவர்களின் தகவல்களை சேகரித்து, விவரங்களை 'சிடி' யாக மாற்றி வரும், 10க்குள் போக்கு வரத்து கழக அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர். முதல்கட்ட பட்டியல் கொடுத்தபின் மாற்றங்கள் இருந்தால், தொடர்ந்து தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment