8ம் வகுப்பு வரை ஃபெயில் கிடையாது என்ற உத்தரவை ரத்து செய்கிறது மத்திய அரசு
எட்டாம் வகுப்பு வரை ஃபெயில் கிடையாது என்ற கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்படும் என மத்திய மனித வளத்துறை இணையமைச்சர் ராம் ஷங்கர் கத்தாரியா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பேசிய அவர், முந்தைய அரசுகளால் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தால், தொடக்கக் கல்வியின் தரம் மிகவும் குறைந்துவிட்டதாக கூறினார்.
8ம் வகுப்பு வரை மாணவர்களை ஃபெயிலாக்காமல், தேர்ச்சி பெற அனுமதிப்பதால், கிராமப் புறங்களில் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதாகவும், தொடக்கக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலாண்மைக் கல்வி நிறுவன மசோதாவால் ஐ.ஐ.எம்.களின் சுயாட்சிக்கு பாதிப்பு இருக்காது என்று உறுதியளித்த அமைச்சர் ராம் ஷங்கர் கத்தாரியா, அதேநேரத்தில் எல்லா நேரத்திலும் ஐ.ஐ.எம்.களை தன்னிச்சையாக செயல்பட அனுமதித்துவிட முடியாது என்றார். பல்கலைக் கழக மானியக் குழுவை கலைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment