TNPTF MANI
1947 ஆக.,15 நள்ளிரவில்சுதந்திரம் பெற்றது. ஏன் இந்த தேதி என்பதற்கு பின் சுவாரஸ்யமான
பின்னணி உள்ளது.
இந்திய சுதந்திர போராட்டம் 1940க்கு பின் தீவிரமானது. இதே நேரத்தில் இரண்டாம் உலகப்போரும் ஏற்பட்டது. போரின் காரணமாக ஆங்கிலேய அரசின் கஜானா வெகுவாக கரைந்திருந்தது. சொந்த நாட்டையே(இங்கிலாந்து) நிர்வகிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. 1945 பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சிஆட்சியைப் பிடித்ததது. இதற்கு முக்கிய காரணம், தனது தேர்தல் வாக்குறுதியில் இந்தியா உள்ளிட்ட காலனி நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. இத்தகைய காரணங்களால் 1948 ஜூன் மாதத்துக்குள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசு முடிவெடுத்தது.
இந்நிலையில் 1947 பிப்., 10ல் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக மவுண்ட் பேட்டன் பொறுப்பேற்றார். உடனடியாக இவர் நேரு, ஜின்னா உள்ளிட்ட தலைவர்களிடம் தொடர் பேச்சுகள் நடத்தினார். இது சுமூகமாக முடியவில்லை. காரணம், ஜின்னா தனிநாடு கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தார். நாட்டில் மக்களிடையே பதட்டமான சூழல் உருவானது. இதை மவுண்ட்பேட்டன் எதிர்பார்க்கவில்லை. இதனால் முன்னதாகவே சுதந்திரம் வழங்க வேண்டிய கட்டாயத்தை அவருக்கு ஏற்படுத்தியது.
இது தொடர்பாக 1947 ஜூன் 3ல் நடந்த கூட்டத்தில் முன்கூட்டியே சுதந்திரம் மற்றும் நாட்டைப் பிரிப்பது பற்றி முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக இது 'ஜூன் 3 மவுண்ட்பேட்டன் திட்டம்' என அழைக்கப்பட்டது. ஆகஸ்ட் 15: மவுண்ட்பேட்டனுக்கு, ஆகஸ்ட் 15 தனிப்பட்ட முறையில் விருப்பமான தேதி. ஏனெனில் இரண்டாம் உலகப் போரின் முடிவில் 1945 ஆக.,15ல் தான் ஜப்பானிய வீரர்கள், இவரிடம் (அப்போது ஆங்கிலேயர்களின் கிழக்கு ஆசிய கமாண்டராக இருந்தார்) சரணடைந்தனர். இதனால் இந்த தேதியில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கவிரும்பினார்.
நள்ளிரவு:
இந்தியாவுக்கு ஆக., 15ல் சுதந்திரம் என அறிவிக்கப்பட்டவுடன் ஜோதிடர்கள் அன்றைய நாள் சரியில்லை, இரண்டு நாட்கள் கழித்து கொடுக்கலாம் என இந்திய தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஆக., 15 என்பதில் மவுண்ட் பேட்டன் உறுதியாக இருந்தார். இந்த சூழ்நிலையில் தான் ஆங்கிலேயர் கணக்குப்படி நள்ளிரவு 12 மணி என்பது புதிய நாள். இந்தியர்களுக்கு அதிகாலை 5 மணி தான் புதிய நாள். இதனால் ஆகஸ்ட் 15 நள்ளிரவே இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.
எப்படி இருக்கும்:
வளர்ந்த இந்தியாவில் நகர்ப்புற - கிராமப்புற வித்தியாசம் குறைவாக இருக்கும். மின்சாரம், குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும். விவசாயம் - தொழில்துறை - சேவைத்துறை இணைந்து செயல்படும். கல்விக்கு முக்கியத்துவம் இருக்கும். ஆய்வாளர்கள், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகளுக்கு ஏற்ற நாடாக இருக்கும். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் ஒழிந்திருக்கும். சமுதாயத்தில் அனைவருக்கும், அனைத்து வசதிகளும் கிடைக்கும். அனைவரும் வாழ விரும்பும் அழகிய தேசமாக இருக்கும். இப்படிப்பட்ட ஒரு வளர்ந்த வல்லரசு நாடாக நிச்சயம் மாறும் என அப்துல் கலாம் கனவு கண்டார்.
முதல் அமைச்சரவை:
1947ல் சுதந்திரம் பெற்றவுடன் 14 பேர் கொண்ட முதல் அமைச்சரவை பதவியேற்றது. நேரு பிரதமராகவும், வல்லபாய் படேல் உள்துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். இதைத்தொடர்ந்து ராஜேந்திர பிரசாத் (உணவு, விவசாயம்), மவுலானா அபுல் கலாம் ஆசாத் (கல்வி), ஜான் மாதாய் (ரயில்வே), சர்தார் பால்தேவ் சிங் (பாதுகாப்பு), ஜெகஜீவன் ராம் (தொழிலாளர் நலன்), சி.எச்.பாபா (வணிகம்), ரபி அகமது கித்வாய் (தொலைத்தொடர்பு), ராஜ்குமாரி அமித் கவுர் (சுகாதாரம்), அம்பேத்கர் (சட்டம்), சண்முகம் ஷெட்டி (நிதி), ஷியம்பிரகாஷ் முகர்ஜி (தொழில்துறை), காட்கில் (எரிசக்தி, சுரங்கம்) ஆகியோர் பதவியேற்றனர்.
சுதந்திர சுவாரஸ்யங்கள்:
* இந்தியா சுதந்திரம் பெற்ற 1947, ஆக.15ல் நாட்டுக்கான தேசிய கீதம் இல்லை. 1911ல் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட 'ஜன கண மன' பாடல் 1950ல் தான் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
* இந்தியா சுதந்திரம் அடைந்த தினத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தி கோல்கட்டாவில் இருந்தார்.மத மோதல்களை எதிர்த்துஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.
* சுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸ் இயக்கத்தையே கலைக்க நினைத்தார் காந்திஜி. சுதந்திரம் பெற்று தந்ததை சொல்லிக்காட்டி மக்களிடம் அதிகாரம் செலுத்துவர் என அவர் நினைத்தார்.
* கதர் துணியில் மட்டுமே தேசியக்கொடி தயாரிக்கப்பட வேண்டும். மற்ற வகை துணிகளில் கொடியை தயாரிப்பது தண்டனைக்குரிய குற்றம்.
* அரபிந்தோ கோஸ், நெப்போலியன் போனபார்ட், ஆகியோர் ஆகஸ்ட் 15ல் பிறந்தவர்கள்.
* மகாதேவ் தேசாய், அமர்சிங் சவுத்ரி, ஆகியோர் ஆகஸ்ட் 15ல் இறந்தவர்கள்.
1/2
No comments:
Post a Comment