வாக்காளர் முன்னிலையிலேயே, அவரது பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்ற பணிகளை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக, 400 'டேப்லெட்'கள் வாங்கப்பட உள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விரும்புவோர், அதற்குரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தாலுகா அலுவலகம் அல்லது மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.
அதிகாரிகள், அந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, கள ஆய்வு மேற்கொண்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஏற்படுகிறது.பெரும்பாலான இடங்களில், விண்ணப்பம் அளித்தும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என, தேர்தல் கமிஷனுக்கு புகார் வருகிறது. ஆன் - லைனில் பதிவு செய்தாலும், நேரடி ஆய்வு மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, வாக்காளரின் வீட்டிற்கு நேரடியாக சென்று, அவர் முன்னிலையில், பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத் தம் செய்தல், முகவரி மாற்றுதல், புகைப்படம் மாற்றுதல் போன்ற பணிகளை, 'டேப்லெட்' சாதனத்தின் உதவியுடன் மேற்கொள்ள, தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.முதற்கட்டமாக, சோதனை அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில், இந்த திட்டம் சோதித்து பார்க்கப்பட்டது. -
No comments:
Post a Comment