அரசு ஊழியர்கள், தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று அலாகாபாத் நீதிமன்றம் கூறி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதை உறுதிப்படுத்துமாறு, அரசு தலைமைச் செயலரிடம் அலாகாபாத் உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டு உள்ளது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி சுதிர் அகர்வால், ''தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் அரசு ஊழியர்கள் சேர்த்தால், அவர்கள் தனியார் பள்ளிகளில் செலுத்தும் அதே அளவு பணத்தை அரசுக் கருவூலத்துக்கும் செலுத்துமாறு உத்தரவிடலாம். அத்துடன், அவர்களுக்கு வழங்கப்படும் மற்ற சலுகைகளையும் ரத்து செய்யலாம்.
அரசுப் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளை அவர்கள் சேர்க்கும் பட்சத்தில், அந்தப் பள்ளிகள் நன்றாக இயங்குவதை உறுதிப்படுத்த முடியும். அதனால், இதுதொடர்பான நடவடிக்கைகளை அரசு அடுத்த 6 மாதங்களுக்குள் எடுக்க வேண்டும் என்று மாநில தலைமைச் செயலரை இந்த நீதிமன்றம் கேட்டுக்கொள்கிறது" என்று கூறி உள்ளார்.
No comments:
Post a Comment