Monday, August 10, 2015
கல்வியியல் கல்லூரிகளில்யோகா கட்டாயம்
கல்வியியல் கல்லுாரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2015--16 முதல் யோகா பாடத்தை தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் கட்டாயமாக்கி உள்ளது.
அனைத்து மாணவர்களுக்கும் யோகா கற்று கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு கற்று கொடுக்க முதலில் ஆசிரியர்கள் யோகா தெரிந்திருக்க வேண்டும்.
இதற்காக கல்வியியல் கல்லுாரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2015--16 முதல் யோகா பாடத்தை தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் கட்டாயமாக்கி உள்ளது. மேலும் யோகாவை ஏற்காத கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் எச்சரித்துள்ளது.
ஓராண்டிற்கு 32 மணி நேரம் செயல்முறை பயிற்சியும், 16 மணி நேரம் 'தியரி'யும் உள்ள வகையில் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு உடற்கல்வி இயக்குனர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.காந்திகிராம பல்கலை கல்வியியல் துறைத்தலைவர் ஜாகிதாபேகம் கூறியதாவது: பெங்களூருவில் நடந்த தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் கூட்டத்தில் யோகா பாடத்தை செயல்படுத்துவது குறித்து கல்லுாரி முதல்வர்கள், பல்கலை துறைத்தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. யோகா பாடத்திற்கு தினமும் ஒரு பாடவேளை ஒதுக்கப்படும், என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment