தகுதி தேர்வு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவின்படி, மாநில அரசுகள் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தி வருகிறது. ஆந்திரா உள்ளிட்ட 13 மாநில அரசுகள், இந்த ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு முறையை பின்பற்றுகிறது. ஆனால், தமிழக அரசு இடஒதுக்கீடு முறையை பின்பற்றவில்லை. இந்த தகுதி தேர்தவில் 60 சதவீதம் மதிப்பெண்கள் (150 மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண்) எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என்று நிர்ணயம் செய்து, தேர்வை நடத்தி வருகிறது. இது அரசியல் சட்டத்துக்கும், இடஒதுக்கீடு முறைக்கும் எதிரானது.
கொள்கை முடிவு எனவே ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘தரமான ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதில், எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ள முடியாது என்று அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. எனவே ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வழங்க முடியாது’ என்று கூறியிருந்தது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தனர்.
அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:– அரசின் தீர்க்கமான முடிவு பொதுவாக அரசின் கொள்கை முடிவு என்பது கோர்ட்டின் பரிசீலனைக்கு கீழ் வராது. ஒருவேளை அந்த கொள்கை முடிவு தன்னிச்சையாக இருந்தால் மட்டுமே, அதில் கோர்ட்டு தலையிட முடியும். தரமான கல்வி வழங்குவதற்காக, ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி மதிப்பெண் 60 சதவீதம் என்று அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்த தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்வதில் எந்த சமரசமும் செய்ய முடியாது என்று அரசு தீர்க்கமான முடிவு எடுத்துள்ளது. மேலும், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், தகுதி மதிப்பெண்ணில் எந்த சலுகைகளும் வழங்க வில்லை. ஆனால், சம்பந்தப்பட்ட மாநில அரசு தகுதி மதிப்பெண்ணில் சலுகைகள் வழங்கலாம் என்று கூறியுள்ளது.
No comments:
Post a Comment