தமிழகம் முழுவதும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவியர் செய்முறைத் தேர்வில் பங்கேற்கின்றனர். பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் நடத்துவது வழக்கம்.
இன்று தொடங் கும் இந்த ஆண்டுக்கான செய்முறைத் தேர்வுகள், இரண்டு கட்டமாக நடத்தப்படுகின்றன. முதற்கட்டமாக 7ம் தேதி முதல் 14ம் தேதி வரையும், 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் செய்முறைத் தேர்வுகள் நடத்த தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 3000 மேனிலைப் பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவியர் செய்முறை தேர்வில் பங்கேற்க உள்ளனர். சென்னை மாவட்டத்தில் 407 மேனிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளின் மூலம் 53 ஆயிரம் மாணவ மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர்.
அவர்களில் 30 ஆயிரத்து 242 பேர் செய்முறைத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். சென்னையில் செய்முறைத் தேர்வுகள் முதற்கட்டமாக 7ம் தேதி முதல் 14ம் தேதி வரையும், 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை இரண்டாம்கட்டமாகவும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் 299 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment