'கல்விக்காக கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் நீட்டிக்கப்படுகிறது. 31.03.2009 ஆண்டு வரை கல்விக் கடன் பெற்றவர்கள் மற்றும் 31.12.2013 ஆம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள கடன்களுக்கு இது பொருந்தும். 31.12.2013-ன் கணக்கின்படி, நிலுவையில் உள்ள வட்டியை செலுத்துவதற்கான பொறுப்பை அரசு எடுத்துக் கொள்ளும். 01.01.2014க்குப் பிறகு கொடுக்கப்பட வேண்டிய வட்டியை கடன் பெற்றவர்கள் செலுத்த வேண்டும். இதன்மூலம் கிட்டத்தட்ட 9 லட்சம் மாணவர்கள் சுமார் 2600 கோடி ரூபாய் அளவிற்கு பயன் பெறுவார்கள். நடப்பு நிதியாண்டிலேயே 2600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்தத் தொகை கனரா வங்கிக்கு மாற்றித்தரப்படும். 01.04.2009-க்குப் பிறகு வழங்கப்பட்ட கல்விக் கடன்களுக்கான மத்திய வட்டி மானிய திட்டம் 2009-10ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, எனினும் 31.03.2009-க்கு முன்பு கடன் பெற்றவர்கள் வட்டியை செலுத்த இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் அவர்களுக்கு உதவி அளிக்க வேண்டியது அவசியமாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு மேல் நிலையில் இருந்த சில ஆயிரக்கணக்கான மாணவர்கள் மட்டுமே கல்விக் கடனைப் பெற முடிந்தது. 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகள் 25 லட்சத்து 70 ஆயிரத்து 254 மாணவர்களுக்கு 57 ஆயிரத்து 700 கோடி ரூபாய் பெறுமானம் உள்ள கடன்களை வழங்கியுள்ளன' என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment