இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, February 10, 2014

யுபிஎஸ்சி தேர்வு: அனைத்து பிரிவினரும் கூடுதலாக 2 முறை தேர்வு எழுதலாம்

யுபிஎஸ்சி எனப்படும் இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வை இந்த ஆண்டு முதல் அனைத்துப் பிரிவினரும் கூடுதலாக இரண்டு முறை எழுதலாம். இது குறித்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில், "2014-ம் ஆண்டு முதல் அனைத்துப் பிரிவினரும் 2 முறை கூடுதலாக தேர்வு எழுதுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேவையெனில், அனைத்துப் பிரிவிலும் இத்தேர்வை எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பிலும் தளர்வு செய்யப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வயது வரம்பில் தளர்வு குறித்த குழப்பத்தை தீர்க்க, விரைவில் அறிவிக்கை வெளியிடப்படும்' என்று பணியாளர் நலத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மத்தியப் பணியாளர் தேர்வாணையம் 2013-ம் ஆண்டு வெளியிட்ட அறிவிக்கைப்படி, யுபிஎஸ்சி தேர்வை அதிகபட்சமாக பொதுப்பிரிவினர் 4 முறையும் (30 வயதுவரை), ஓபிசி பிரிவினர் அதிகபட்சமாக 7 முறையும் (33 வயதுவரை) தேர்வு எழுதலாம். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 35 வயதுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுத முடியும். அரசின் புதிய அறிவிப்பு, ஏற்கெனவே தனது 4 வாய்ப்புகளையும் பயன்படுத்திய 30 வயதிலான பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment