மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தின் உறுப்பினர் - செயலர், பழனிசாமி அறிவிப்பு: ஒன்பதாம் வகுப்பிற்கு, இறுதி செய்யப்பட்ட மூன்றாம் பருவ பாட திட்டம், பொதுமக்கள் பார்வைக்காக, www.dse.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ் பாடம் தவிர்த்து, இதர பாட புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற, புத்தகங்களின், இரு நகல்களுடன், உறுப்பினர் - செயலர், மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (இடைநிலைக்கல்வி), கல்லூரி சாலை, சென்னை-6 என்ற முகவரிக்கு, 27ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள், நேரிலோ, அஞ்சல் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்.
உத்தேச விலை அவசியம் : ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையில், தமிழ் பாடம் தவிர்த்து, இதர பாடங்களுக்கு, ஒப்புதல் பெறவும் விண்ணப்பிக்கலாம். பாட புத்தகத்தின், உத்தேச விலையை, குறிப்பிட வேண்டும். பாட புத்தகங்களுக்கு, ஒப்புதல் அளிப்பது, மாநில கல்வி வாரியத்தின் இறுதி முடிவுக்கு உட்பட்டது. இவ்வாறு, பழனிசாமி அறிவித்து உள்ளார். தனியாரை கண்டுகொள்வதில்லை
: மாநில கல்வி வாரியத்தின் ஒப்புதலை பெறும் பதிப்பகங்கள், தாங்கள் அச்சிட்ட பாட புத்தகங்களை, பள்ளிகளுக்கு, விற்பனை செய்யலாம். பெரும்பாலான பள்ளிகள், அரசு பாட புத்தகங்களையே வாங்கி விடுவதால், தனியார் பதிப்பகங்களிடம் இருந்து, அதிகளவில், தனியார் பள்ளிகள், புத்தகங்களை கொள்முதல் செய்வதில்லை. இதனால், விண்ணப்பிக்கும் பதிப்பகங்களின் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்தை தாண்டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment