தமிழகத்தில் வரும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் புகைப்படம், பார் கோடு அச்சிடப்பட்ட 38 பக்கங்கள் அடங்கிய விடைத்தாள்கள் வழங்கப்படவுள்ளன. இதனால், டம்மி எண் போடும் பணியும் அதற்கான நேரமும் தவிர்க்கப்படும். மேலும், பேப்பர் சேஸிங் உள்ளிட்ட குளறுபடிகளையும் தடுக்கலாம். கடந்த அக்டோபர் மாதம் நடந்த தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வில் இம்மாதிரியான விடைத்தாள்கள் அளிக்கப்பட்டு முன்னோட்டம் பார்க்கப்பட்டது. இந்த புதுத் திட்டத்தின்படியே வரவுள்ள பொதுத்தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.
இதனால் பழைய தேர்வு முறைக்காக இந்த ஆண்டின் துவக்கத்திலேயே தயாரித்து வைக்கப்பட்டிருந்த விடைத் தாள்கள் பயன்படுத்தப்படாமலே வீணாகும் நிலை ஏற்பட்டது. அவற்றை என்ன செய்வது என்று கல்வித் துறை அதிகாரிகள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வுகளில் அனைத்து பாட தேர்வுகளுக்கும் இந்த விடைத்தாள்களை விநியோகிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி எழுதும் சுமார் 20 லட்சம் மாணவர்களுக்கு ஏற்கெனவே தயாரிக்கப்பட்டிருந்த விடைத்தாள்கள் அளிக்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 100 கோடி விடைத்தாள்கள் வீணாவது தவிர்க்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment