"புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து, முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்,'' என, உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். சென்னை எழிலக வளாகத்தில், உணவு துறை ஆய்வு கூட்டம், நேற்று, நடந்தது. இதில், அமைச்சர் காமராஜ் பேசியதாவது: நடப்பாண்டிற்கு புதுப்பிக்கப்பட்ட, ரேஷன் கார்டுகளின் பயன்பாட்டு காலம், வரும், 31ம் தேதியுடன் முடிவடைகிறது. உடற்கூறு முறையிலான, தேசிய மக்கள் தொகை பதிவாளர் கணக்கெடுப்பு பதிவுகளின் அடிப்படையில், "ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனினும், மத்திய அரசின், மக்கள் தொகை பதிவாளரின் கணக்கெடுப்பு பணி முழுமையாக முடிந்து, தகவல் தொகுப்பை பெற, காலதாமதமாகும் என்பதால்,2014 15ல் தான், "ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வழங்க முடியும் என, தெரிகிறது. எனவே, தற்போது புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, 31.12.14 வரை என, மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தற்போது, புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில், 2014ம் ஆண்டிற்கும் உள்தாள் ஒட்டப்பட்டு இருப்பதால், இதையே பயன்படுத்தி, உணவு பொருட்களை பெறலாம். இவ்வாறு, அவர் பேசினார்.
No comments:
Post a Comment