தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பணி நிரவலின் போது பொறுப்பாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய விதிகள்.
===============================================
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் இயக்குநர் அறிவுறுத்தலின்படி பணி நிரவல் கட்டாயமாக செய்ய உள்ளார்கள்.அதில்
1)மாவட்டம் விட்டு மாவட்டம் பணி நிரவல் கிடையாது.
2)பணி நிரவலில் பணி நிரவல் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம் இருப்பின் ஒன்றியத்திற்குள் பணி நிரவல் செய்வார்கள்.
3)பணி நிரவல் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம் இல்லை எனில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் செய்வார்கள்.
4)ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் செய்யும் நிலை ஏற்பட்டால் அந்த ஒன்றியத்தில் மிகவும் இளையவர் எவரோ (block level service junior) அவரையே பணி நிரவலில் அதே மாவட்டத்தில் பிற ஒன்றியத்திற்கு நிரவல் செய்ய வேண்டும்.
5)ஒன்றியத்திற்குள் பணி நிரவல் எனும்போது எந்த பள்ளியில் பணி நிரவல் ஏற்படுகிறதோ அந்த பள்ளியில் பணி ஏற்றதில் யார் இளையவரோ ( station junior ) அவரே பணி நிரவல் செய்யப்பட வேண்டும்.பணி நிரவல் செய்யப்பட வேண்டியவர் மாற்று திறனாளி எனில் அவரை விட்டுவிட்டு அந்த பள்ளியில் அவருக்குமுன் பணியில் சேர்ந்தவரை பணி நிரவல் செய்ய வேண்டும்.
6)பணி நிரவல் 30.09.2015 அன்று உள்ள மாணவர்கள் பதிவின் அடிப்படையில் செய்யப்பட உள்ளது.இதில் சிறு விதி தளர்வும் உள்ளது. உதாரணமாக ஒரு பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணியில் இருந்து 30.09.2015ல் மாணவர்கள் பதிவு 55 எனில் ஒரு ஆசிரியர் பணியிடத்தினை நிரவல் செய்வார்கள்.அதே பள்ளியில் 01.08.2016ல் 61 மாணவர்கள் பதிவு உள்ளது எனில் விதி தளர்வு தந்து பணியிடத்தினை நிரவல் செய்யக்கூடாது.அது போலவே ஒரு பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணியில் இருந்து 30.09.2015ல் 61 மாணவர்கள் பதிவு இருந்து 01.08.2016ல் 55 மாணவர்கள் பதிவு உள்ளது என்றாலும் பணி நிரவல் செய்யக்கூடாது
No comments:
Post a Comment