'சி.பி.எஸ்.இ., மற்றும் மாநில கல்வி வாரிய படிப்புகளுக்கு, ஒரே மாதிரியான பாட முறைகளை அறிமுகம் செய்யும் திட்டம் அரசிடம் இல்லை' என, லோக்சபாவில் நேற்று தெரிவிக்கப்பட்டது. லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தின் போது, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணைஅமைச்சரும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியைச் சேர்ந்தவருமான உபேந்திரா குஷ்வாஹா பதிலளித்தார். அவர் கூறியதாவது:
பல்வேறு மாநிலங் களின் கலாசாரம், மொழி உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து, ஒரே மாதிரியான பாடங்கள் தயாரிக்க வாய்ப்பில்லை. எனவே, சி.பி.எஸ்.இ., மற்றும் மாநில கல்வி வாரிய படிப்புகளுக்கு, ஒரே மாதிரியான பாட முறைகளை அறிமுகம் செய்யும் திட்டம் அரசிடம் இல்லை. இருப்பினும், பொதுவான அடிப்படை பண்புகள், சுதந்திர போராட்ட இயக்கம், தேசிய ஒற்றுமையை சாராம்சமாக உடைய விஷயங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, தேசிய கட்டமைப்பில் பாடங்கள் தயாரிக்க, தேசிய கல்விக் கொள்கை திட்டமிட்டு உள்ளது.
இதற்கு, சில மாநிலங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. பள்ளி மாணவர்கள் எடுத்துச் செல்லும் புத்தகப்பையின் எடையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment