இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, August 01, 2016

பி.எட் விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது


2016-2017-ம் ஆண்டு பி.எட். படிப்புக்கான விண்ணப்பம் விற்பனை நேற்று முதல் தொடங்கி உள்ளது. 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை விண்ணப்பம் வழங்கப்படும்.

பி.எட். விண்ணப்பங்கள்

ஆசிரியர் பணிக்கு செல்ல விரும்புபவர்கள் பி.எட். படிப்பு படிக்க வேண்டும். இந்தப்படிப்புக்கான விண்ணப்பம், விற்பனை சென்னை திருவல்லிக்கேணி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 13 கல்வியியல் கல்லூரிகளில் நேற்று முதல் தொடங்கியது.

சென்னையில் உள்ள கல்லூரியில் மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களுடன் வந்து ஆர்வமுடன் விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

13 கல்லூரிகளில் விண்ணப்பம்

தமிழகத்தில் 2016-2017-ம் ஆண்டுக்கான பி.எட். படிப்புக்கான விண்ணப்பம் இன்று (நேற்று) விற்பனை தொடங்கி உள்ளது. 9-ந்தேதி வரை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை, சைதாப்பேட்டை கல்வியியல் மேம் பாட்டு நிறுவனம், திருவல்லிக்கேணி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி, ஒரத்தநாடு அரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி, கோயம்புத்தூர் அரசு கல்வியியல் கல்லூரி, வேலூர் காந்திநகர் அரசு கல்வியியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம் லட்சுமி கல்வியியல் கல்லூரி, சேலம் பேர்லாண்ட்ஸ் ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி, மதுரை தியாகராசர் பர்செப்டார் கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆத்தூர், என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி ஆகிய 13 கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 7 அரசு கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகள் உட்பட 21 கல்லூரிகளில் உள்ள 1,777 இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.எட். மாணவர்கள் சேர்க்கை இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு விரைவில் நடக்க உள்ளது.

தபால் மூலம் விற்பனை இல்லை

விண்ணப்பத்தின் விலை ரூ.500. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள், சுயசான்றொப்பமிட்ட நகலுடன் ரூ.250 செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். பணமாகவோ அல்லது செயலாளர், தமிழ்நாடு பி.எட் சேர்க்கை, சென்னை-600 005 என்ற பெயரில் சென்னையில் பணமாக்கும் வகையில் வரை வோலை (டிமாண்ட் டிராப்டு) நேரில் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் நேரில் மட்டுமே வழங்கப்படும். மாறாக தபால் மூலம் விண்ணப்பம் விற்பனை செய்யப்படவில்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 10-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் செயலாளர், தமிழ்நாடு பி.எட். மாண வர் சேர்க்கை- 2016-2017, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5 என்ற முகவரிக்கு வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. பி.எட். சேர்க்கைக்கான வழிகாட்டி நெறிமுறைகள் www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்

No comments:

Post a Comment