இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, July 23, 2016

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் துவங்கியது..பேரம்!


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களது விருப்பத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டு கவுன்சிலிங் தேதியை, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். தேதி அறிவித்த உடனேயே, அதிக கிராக்கி உள்ள எட்டு மாவட்டங்களில் இடைத்தரகர்கள் முகாமிட்டு, 'வசூல்' வேட்டையில் இறங்கி விட்டனர்.

ஆசிரியர் இடமாறுதலுக்கு, ஜூலை, 19 முதல், முதன்மை கல்வி அலுவலகத்தில், ஆசிரியர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்; 28ம் தேதி வரை அவகாசம் உள்ளது. அடுத்த மாதம், 6ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது.
* அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஆக., 6ல்,
மாவட்டத்திற்குள்ளும், பிற மாவட்டங்களுக்குமான இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும்.
* அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஆக., 7ல், பதவி உயர்வு கவுன்சிலிங்கும், உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு, ஆக., 13ல், மாவட்டத்திற்குள்ளேயும், வெளியிலும் கவுன்சிலிங் நடக்கும்.
* அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள், ஆக., 20; வேறு மாவட்டத்துக்கு, 21ம் தேதி; பதவி உயர்வு கவுன்சிலிங், 22ம் தேதியும் நடக்கும்.
* உடற்கல்வி, தையல், இசை, கலை மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் ஆக., 23ம் தேதி; வேறு மாவட்டங்களுக்கு, 24ல் கவுன்சிலிங் நடக்கும்.
* பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஆக., 27 முதல், 29ம் தேதி வரை பணி நிரவலும், செப்., 3ம் தேதிமாவட்டத்திற்குள்ளும், 4ல் வேறு மாவட்டங்களுக்கும் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும். இடைநிலை, உடற்கல்வி, சிறப்பாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக, செப்., 6ல் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்படும்
இந்நிலையில், ஆசிரியர், அலுவலர் சங்கங்கள், பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும். அரசியல் புள்ளிகள் மூலம், காலியிடங்களுக்கான கோரிக்கைகள் வரத் துவங்கி உள்ளன. அதிக போட்டி உள்ள, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்களிலும், தலைநகர் சென்னையிலும், பேரத்தை அரங்கேற்ற, சில இடைத்தரகர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால், 'யாரிடமும், 'வி.ஐ.பி., கோட்டா' என்ற அடிப்படையில், இடமாறுதல் செய்யக் கூடாது' என, கண்டிப்பான உத்தரவு, தலைமை செயலகத்தில் இருந்து வந்துள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன

No comments:

Post a Comment