நிர்வாக வசதிக்காகவும், அரசுக்கு ஏற்படும் தொடர் வாடகை செலவினத்தைத் தவிர்க்கவும் மின் ஆளுமைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தானியங்கி பட்டியல் ஏற்புமுறையையும், மின் ஓய்வூதியம் போன்ற திட்டங்களை செம்மையாகச் செயல்படுத்திடவும், விலைமதிப்பு மிக்க முத்திரைத் தாள்கள் போன்ற பொருள்களைப் பாதுகாக்கவும் வாடகை கட்டடங்களில் இயங்கும் சார் கருவூலங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் 25 சார் கருவூல அலுவலகக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தில் 3,060 சதுர அடி பரப்பளவில், பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இதேபோன்று, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி, ஆலங்குளம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டடங்களையும் அவர் திறந்து வைத்தார்.
No comments:
Post a Comment