2016-17ம் நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:
* தமிழகத்தில் செயல்படுத்தப்படும் உதவி திட்டங்கள், மானியங்களுக்காக ரூ.68,211.5 கோடி நிதி ஒதுக்கீடு.
* நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் கடலூர் மாவட்டத்தில் மேற்காெள்ள ரூ.140 கோடி ஒதுக்கீடு
* அடுத்த 5 ஆண்டுகளில் 13000 மெகாவாட் அனல் மின்சாரம், 2500 மெகாவாட் புனல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
* 3000 மெகாவாட் சூரிய மின்சக்தியும் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும்.
* பண்ணை இயந்திரமாக்கல் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
* பண்ணை இயந்திரம் வாங்க விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
* பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர் கல்வி உதவித்தொகைக்கு ரூ.208 கோடி ஒதுக்கீடு
* திருத்திய பட்ஜெட் மதிப்பீடு ரூ.1,48,175.09 கோடி
* 2000 புதிய அரசுப் பேருந்துகள் வாங்க ரூ.125 கோடி கடன் வழங்கப்படும்.
* தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் 2 லட்சத்துக்கு 52 ஆயிரத்து 431 கோடி ரூபாய்.
* ரூ.13,856 கோடி மின்சாரத்துறைக்கு மானியமாக வழங்கப்படும்.
* அரசு போக்குவரத்துறைக்கு ரூ.1295.08 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* லோக் அயுக்தா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* இந்த நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.
* இலங்கை அகதிகளுக்காக ரூ.105.98 கோடி, மாற்று திறனாளிகளுக்கு ரூ.396.74 கோடி ஒதுக்கீடு
* 4லிருந்து 8 கிாாமமாக உயர்த்தப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்துக்காக ரூ.703.16 கோடி ஒதுக்கீடு
* இஸ்லாமிய உலமாக்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000லிருந்து ரூ.1500 அக உயர்த்தப்படும்.
* 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆராய்ந்து அமல்படுத்த உயர்மட்ட அலுவலர் குழு அமைக்கப்படும்.
அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்
* தமிழகத்தில் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.
* 100 யூனிட் இலவச மின்சாரத்தால் ஆண்டுக்கு ரூ.1607 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
* உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.183.24 கோடி நிதி ஒதுக்கீடு
* சமூக நலத்துறைக்கு ரூ.4,512.32 கோடி ஒதுக்கீடு
* 500 டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூடியதால் அரசுக்கு ரூ.6,636.08 கோடி இழப்பு
* மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* இந்த நிதியாண்டில் வணிகவரித்துறை வருவாய் ரூ.67,629.45 கோடியாக இருக்கும்.
* அடுத்த ஓராண்டில் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
* வேலைவாய்ப்பு அலுவலகங்கள், வேலைவாய்ப்பு வழிகாட்டி மையமாக செயல்படும்.
* தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்த 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* முதல்வரின் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.928 கோடி ஒதுக்கீடு
* தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
* அடுத்த ஓராண்டில் நபார்டு வங்கி உதவியுடன் சாலை மேம்பாடு பணிகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு
* ரூ.24.58 கோடி நிதி ஒதுக்கி வைகை, நொய்யல் ஆறுகள் தூர்வாரி மேம்படுத்தப்படும்.
* ரூ.52.64 கோடியில் ஆற்றங்கரையோரங்களில் மரம் நடும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* அடுத்த ஓராண்டில் 3.50 லட்சம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.
* ரூ.422 கோடியில் 2673 வீடுகள் காவலர்களுக்கு கட்டப்படும்.
* தமிழகத்தின் வருவாய்த்துறை பற்றாக்குறை ரூ.15,854.47 கோடி, மொத்தம் நிதி பற்றாக்குறை ரூ.40533.84 கோடி
* அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
* அடுத்த ஓராண்டில் ரூ.420 கோடியில் சூரிய ஒளி மின்வசதி கொண்ட 20 ஆயிரம் வீடுகள் கட்ட திட்டம்.
* அடுத்த ஓராண்டில் 5.35 லட்சம் மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
No comments:
Post a Comment