இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, July 13, 2016

ஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகை 25 ஆண்டுகளாக உயராததால் விரக்தி


ஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகை, 25 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருப்பதால், அதில் பங்கேற்கும் ஆர்வம், மாணவர்களிடம் குறைந்து வருகிறது. தமிழகத்தில், கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, 1991ம் ஆண்டு முதல், ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

4 ஆண்டுகளுக்கு...: கிராமப்புற அரசு பள்ளிகளில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படும் இத்தேர்வில், மாவட்டத்துக்கு, 50 மாணவர்கள், 50 மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிளஸ் 2 முடிக்கும் வரை, நான்கு ஆண்டுகளுக்கு தலா, 1,000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த, 25 ஆண்டுகளாக, இந்த உதவித்தொகை அதிகரிக்கப்படவில்லை. இதனால், இத்தேர்வில் பங்கேற்கும் ஆர்வம், மாணவர்களிடையே குறைந்து வருகிறது.

இது குறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: கடந்த, 1991ம் ஆண்டில், 1,000 ரூபாய் என்பது, அம்மாணவனின் கல்விக்கு மட்டுமின்றி, குடும்பத்துக்கும் உதவும் வகையில் இருந்தது. அப்போது, இத்தேர்வில் பங்கேற்க, குடும்ப ஆண்டு வருமானம், 15 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. ஆனால், காலப்போக்கில் இந்த நிபந்தனை தளர்த்தப்பட்டு, தற்போது, ஒரு லட்சம் ரூபாய் வரை, குடும்ப ஆண்டு வருமானம் உள்ள மாணவர்கள்,

இத்தேர்வில் பங்கேற்க முடியும். அதேநேரம், உதவித்தொகையின் அளவு மட்டும், 25 ஆண்டுகளாகியும் சிறிதும் உயர்த்தப்படவில்லை.அதிகரிக்க வேண்டும் இதனால், மாணவ, மாணவியரிடையே, இத்தேர்வுக்கு தயாராகும் ஆர்வம் குறைந்து வருகிறது. உதவித்தொகையின் அளவை அதிகரிக்கும் போது, அவை கிராமப்புற மாணவர்களை ஊக்கப்படுத்துவதுடன், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மனப்பாங்கையும் அதிகப்படுத்தும். எனவே, தமிழக அரசு, ஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment