யாருக்கு ஓட்டளித் தோம்' என, காண்பிக்கும், 'வி.வி.பி.ஏ.டி.,' இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி விளக்கம் அளித்தார்.தமிழக சட்டசபை தேர்தலில், 'வோட்டர்ஸ் வெரிபிகேஷன் பேப்பர் ஆடிட் ட்ரெயல்' எனப்படும், 'யாருக்கு ஓட்டளித்தோம்' என, அறியும் வசதியை, தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்கிறது. முதல் முறையாக, காஞ்சிபுரம் உட்பட 17 சட்டசபை தொகுதிகளில், இம்முறை செயல்பட உள்ளது.
இதற்காக, 'பெல்' நிறுவனம் தயாரித்துள்ள பிரத்யேக இயந்திரங்கள், காஞ்சிபுரம் தொகுதிக்கு வந்துள்ளன. அதாவது, 316 ஓட்டுச் சாவடிகளுக்கும், 397 இயந்திரங்கள் வந்துஉள்ளன. இந்த இயந்திரத்தின் செயல்பாடு குறித்து, காஞ்சி புரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி கூறியதாவது:மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், வாக்காளர்கள் தங்களின் ஓட்டுகளை பதிவு செய்கின்றனர்; அப்போது, 'வி.வி.பி.ஏ.டி.,' இயந்திரம் அருகிலேயே இருக்கும். வாக்காளர்கள் ஓட்டளித்தவுடன், இயந்திரத்தில் ஓட்டு விவரம் அடங்கிய சீட்டு, பதிவு செய்யப்பட்டு, அந்த இயந்திரத்திலேயே விழும். வாக்காளர்களுக்கு அந்தப் பதிவு செய்யப்பட்ட சீட்டு வழங்கப்படாது.
இயந்திரத்தின் வெளியில் உள்ள சிறிய திரையில், வாக்காளர்கள் யாருக்கு ஓட்டளித்தனர் என, காண்பிக்கப்படும். இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தாலுகா அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment