வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை, 61.50 ரூபாய் குறைந்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடு - 14.20 கிலோ; வணிகம் - 19 கிலோ என, இரண்டு வகையான சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. இந்த நிறுவனங்கள், சர்வதேச சந்தையின், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும், சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன.
சென்னையில், தற்போது, வீடுகளுக்கான காஸ் சிலிண்டர் விலை, 61.50 ரூபாய் குறைந்து, 525.50 ரூபாயாக உள்ளது. இது, கடந்த மாதம், 587 ரூபாயாக இருந்தது. சென்னையில், பிப்ரவரியில், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை, 1,205.50 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, இதன் விலை, 108 ரூபாய் குறைந்து, 1,097.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. உணவு பொருட்கள் விலை குறையுமா? உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சமையல் காஸ் சிலிண்டர் விலை உயரும் போது, ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.
தற்போது, சிலிண்டர் விலை குறைந்து வருவதால் உணவு பொருட்களின் விலையை குறைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment