அரசு பள்ளிகளில், மூன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, வகுப்பறையில் கண்டிப்பாக வரைபடங்கள் மாட்ட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மற்றும் உதவிபெறும் தொடக்கப் பள்ளி மாணவர்கள், தங்களின் நாடு, மாநிலம், வசிக்கும் பகுதியை புவியியல் ரீதியாக அறிந்து கொள்ள, ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டுமென, உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, வகுப்பறை சுவர்களில் வரைபடங்களை மாட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக, மூன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, புவியியல் வரைபடங்கள், அரசின் சார்பில் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்த படங்களை, வகுப்பறைகளில் கண்டிப்பாக, மாணவர்கள் பார்வையில் படும்படி மாட்டி வைத்து, அதிலுள்ள இடங்களை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டுமென, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
வரைபடத்துடன் கற்றுத் தராத ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment